மகளுக்காகக் காதலனைத் தேடிய தாய்

390
Advertisement

மகளுக்காகக் காதலனைத் தேடிய தாய் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வருபவர் பெத் டேவிஸ். 61 வயதான இவர், 2004 ஆம் ஆண்டுமுதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். என்றாலும், 2020 ஆம் ஆண்டில் அது தீவிரமடைந்து மெட்டா ஸ்டேடிக் மார்பகப் புற்று நோயாக மாறி மேலும் அவதிக்குள்ளாக்கியது. அது எலும்புகளையும் தாக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், தனது ஆயுள் குறைந்து வருவதாகக் கருதிய பெத் டேவிஸ், தனது 30 வயது மகள் மோலிக்காகச் செய்த செயல் தற்போது ஆன்லைனில் வைரலாகத் தொடங்கி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகளின் சம்மதத்துடன் அவளுக்கான காதலனைத் தேடத் தொடங்கினார் பெத் டேவிஸ்.
அதற்காக மகளைப் பற்றிய விவரங்களுடன் விளம்பரப் பலகை ஒன்றைப் பொது இடத்தில் நிறுவினார். அதில் என் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுபற்றிக்கூறியுள்ள மோலி, எனது அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். அதுபோன்ற ஒரு துணையைத்தான் நான் தேடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மகளுக்காகத் தாய் காதலனைத் தேடிய செயல் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.