அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது

53

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும், சிந்தனையாளர் கூட்டம், ஹரியானாவில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதில், சைபர் குற்றங்கள், காவல் துறையை நவீனமயமாக்குவது, குற்றவியல் நீதி அமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, எல்லை நிர்வாகம், கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.