மேற்கு வங்கத்தில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்…

138
Advertisement

மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார்.

அந்த நபர் மெர்குரி, ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் வைத்து கொலை மிரட்டல் விடுத்ததால், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர், அந்த நபரிடம் சாதுரியமாக பேசி மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.