சென்னை அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த நிலையில், ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்…

37
Advertisement

பொத்தேரியை சேர்ந்த பத்மாவதி என்பவர் தனியார் கல்லூரியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

அவர் பணிமுடிந்து ஜி.எஸ்.டி சாலையை கடந்த போது, வேகமாக வந்த சொகுசு கார், மோதியது. இதில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த சொகுசு கார், பிரபல யூடியூபர் இர்ஃபானுடையது என்பது தெரியவந்தது.

காரை ஓட்டி வந்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்த அசாருதீனை கைது செய்த போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரில் இர்ஃபான் பயணித்தாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.