தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளைக் கேக்வெட்டிக்
கொண்டாடியுள்ளது ஒரு கொரில்லா குரங்கு.
ஃபட்டூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் கொரில்லா
1957 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கக் காட்டில் பிறந்ததாகக்
கூறப்படுகிறது. பின்னர், ஒரு மாலுமியால் அங்கிருந்து பிரான்ஸ்
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து 1959 ஆம்
ஆண்டில் பெர்லின் மிருகக் காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது.
உலகிலேயே மிக அதிக வயதானதாகக் கருதப்படுகிறது இந்தப்
பெண் கொரில்லாக் குரங்கு. இது 1974 ஆம் ஆண்டு ஒரே ஒரு
சந்ததியைப் பெற்றெடுத்தது. தற்போது இரண்டு குழந்தைகளின்
பாட்டியான ஃபட்டூவுக்கு அந்தப் பேத்திகள் மூலம் 13 மற்றும்
16 வயதில் 2 கொள்ளுப்பேத்திகளும் உள்ளனர்.
கொள்ளுப்பாட்டியாகிவிட்ட இந்த ஃபட்டூ இந்தாண்டு ஏப்ரல்
13 ஆம் தேதி, புதன்கிழமை அன்று தனது 65 ஆவது பிறந்த
நாளை தொழிலதிபர் எலன் மாஸ்க்குடன் கொண்டாடியுள்ளது.
தனது பிறந்த நாளில் அரிசி, பாலடைக்கட்டி, காய்கறிகள், பழங்கள்
ஆகியவற்றால் ஆன கேக்கை சாப்பிட்டு மகிழ்ந்தது.