கேன்சரை தடுக்க தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் பால்! கூடவே கிடைக்கும் கோடி நன்மைகள்…!

244
Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல நிறுவனங்கள் பொடிகள், மாத்திரைகள் போன்ற பல பொருட்களை தயாரிக்கின்றன. ஆனால், செயற்கையான தயாரிப்புகளை நம்புவதை பார்க்கிலும், பல நோய்களுக்கும் தடுப்பு மருந்து நம் வீட்டு சமையல் அறையில் இருப்பதை நம்ப முடிகிறதா?

கேன்சர், அல்சைமர் மற்றும் இதயநோய் போன்ற நோய்கள் ஏற்பட நாள்பட்ட அழற்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட மஞ்சள் பாலை பருகுவதால் இது போன்ற நோய் பாதிக்கும் வாய்ப்புகள் கணிசமாக குறைகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் உட்பொருள், மூளையை சுறுசுறுப்பாக்கும் நியூரோட்ரோபிக் compoundsஐ அதிகரித்து மூளை செயல்பாட்டை அதிகமாக்குகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்து நிம்மதியான உணர்வை அளிக்க வல்லது மஞ்சள்.

சரும பராமரிப்பிற்காக வெளிப்புறமாக பயன்படுவது போலவே, தொடர்ந்து மஞ்சள் பால் குடிப்பதால் உள்ளிருந்து சருமப் பொலிவு அதிகரிப்பதை உணர முடியும். குடல் ஆரோக்யத்திலும் ஆற்றலுடன் செயல்படும் மஞ்சள் பாலை குடிப்பதால் உடல் எடை குறைப்பிலும் சிறப்பான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.