‘தல’ ய பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்து வந்த ரசிகர்

29
Advertisement

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்
டோனியைப் பார்க்க 1400 கிலோ மீட்டர் நடந்தே வந்த வாலிபர் பற்றிய
செய்தி கிரிக்கெட் பட்டாளத்தை ஈர்த்து வருகிறது.

உலக கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக விளங்குபவர்
மகேந்திர சிங் டோனி. இந்தியாவில் சினிமா நடிகர்களைத் தாண்டி
ரசிகர்கள் கூட்டம் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனிக்கும்
தனி ரசிகப் பட்டாளமே உள்ளது.

Advertisement

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும்
சினிமா நடிகர்களுக்கு உள்ளதுபோன்று மவுசு குறையாமல் உள்ள
டோனியைக் காண அவரது தீவிர ரசிகரான அஜய் கில் என்ற 18 வயது
வாலிபர் கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜுலை 29 ஆம் தேதி ஹரியானா
மாநிலத்தில் உள்ள தனது சொந்தக் கிராமத்தில் இருந்து நடக்கத்
தொடங்கியுள்ளார்.

16 நாட்கள் நடந்தேவந்து 1400 கிலோ மீட்டர் தொலைவு கடந்து
பீகார் மாநிலம் ராஞ்சியிலுள்ள டோனியின் பண்ணை வீட்டை அடைந்துள்ளார்.

டோனி அப்போது அவரது பண்ணை வீட்டில் இல்லை.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியில் விளையாடுவதற்கு அமீரகத்துக்குச் செல்வதற்காக
சென்னை விமான நிலையத்தில் இருந்துள்ளார்.

டோனியைப் பார்த்த பிறகுதான் சொந்த ஊருக்குத் திரும்புவேன் என்று
அடம்பிடித்த அந்த வாலிபரை டோனியின் நண்ரான அனுராக் சாவ்லா என்ற
பெரிய வணிகர் தனது நண்பர்களுடன் சந்தித்து சமாதானப்படுத்தியுள்ளார்.

ஒரு நாள் ராஞ்சியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்த அவர்,
மறுநாள் அஜய் டெல்லி செல்ல விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து,
டோனி இந்தியாவுக்கு வந்த பிறகு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இளைஞர் தனது தலையிலுள்ள சிகையை ட்ரிம் செய்துவிட்டு
மஹி, டோனி என தலைமுடியிலேயே அலங்காரம் செய்துள்ளார்.

கிரிக்கெட் வீரரான அஜய், டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக
அறிவுத்தவுடன் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டாராம்.

தல டோனியைப் பார்த்து அவர் ஆசிர்வதித்த பிறகு மீண்டும் கிரிக்கெட்
விளையாடப் போவதாகவும் கூறியுள்ளார்.

டோனிகள் உருவா வேண்டும்…..சினிமா மட்டுமே வாழ்க்கையல்ல…