ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

23
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

  இவரது மகன் கோகுல் போரூரில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் நீச்சல் பழக சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.