ஐபிஎல் இறுதிப்போட்டி திங்கட்கிழமை இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்றும் மழையே விளையாடி ஆட்ட நாயகன் விருது பெரும் என்று பல்வேறு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் போல் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதாகவும், மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று போல் மழை குறுக்கிட்டால் ஆட்டம் கண்டிப்பாக ஓவர்கள் குறைக்கப்படும். அப்படி நடந்தால் எந்த அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே மற்றும் குஜராத் என இரண்டு அணிகளிலும் பலம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே மழை பெய்தால் இவ்விரு அணியில் உள்ள சுழற் பங்குவீச்சாளர்களுக்கும் கடினமான சூழல் நிலவும்.