திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தைப் பொறுத்தவரை 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மற்றும் இறுதித் தேர்வு முடிந்து பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் 1 முதல் 12 மீ வகுப்பு பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனைப்படி வெயிலைக் கருத்தில் கொண்டு தேதி மாற்றம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.