இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…

145
Advertisement

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அரசாங்க ஆய்வுக்கூடத்தில் அவற்றை பரிசோதனை செய்வது கட்டாயம் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் கடந்த 22 ஆம் தேதி அறிவித்தார். இதனை தொடர்ந்து, இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.