எலான் மஸ்க் கண்டுபிடித்த ‘முட்டாள்’.. Twitter சிஐஓ பதவியை ராஜினாமா.. முதலீட்டாளர்கள் குஷி..!

160
Advertisement

எலான் மஸ்க் வியாழக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் டிவிட்டர் அல்லது x.com நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஐஓ-வான பராக் அகர்வால்-ஐ கிண்டல் செய்யும் விதமாக அவர் வளர்க்கும் நாயை சிஐஓ-வாக நியமித்தார்.

எலான் மாஸ்க் தனது டிவிட்டர் பதிவில் யார் அந்த புதிய சிஐஓ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் ஒரு பெண் என்றும், இந்த ஆறு வாரங்களில் சிஐஓ பதவியேற்று பணியைத் தொடங்குவார் என்றும் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனம் சுமார் 44 பில்லியன் டாலருக்கு மொத்தமாக வாங்கிய எலான் மாஸ்க், முதல் நாளில் இருந்தே பல அதிரடியான முடிவுகளை எடுத்தார். டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் எலான் மாஸ்க் கையில் வைத்திருந்தாலும், அதன் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி அல்ல என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வியாழக்கிழமை ட்விட்டரின் சிஐஓ பதவியை ராஜினாமா செய்தாலும், முழுமையாக டிவிட்டரை விட்டு வெளியேறுவது இல்லை. இதுக்குறித்து டெலவேர் நீதிமன்றத்தில் அவர் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.