சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அதிலும், ரஜினிக்கு ஜப்பானில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? காரணம், 1998ஆம் ஆண்டு japanese மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன ‘முத்து’ படம் தான். அதற்கு பிறகு, கடைசியாக வந்த ‘அண்ணாத்த’ படம் வரையில் அதே பாணியில் இங்கு வெளியாகி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
அண்மையில், Youtube பிரபலம் ஒருவர் ஜப்பானில் வலம் வரும் ரஜினி ரசிகரை பற்றி பதிவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. TN 02Z 4995 என்ற ரஜினி ஒட்டிய ஆட்டோ நம்பரை வைத்திருக்கும் ஹிரோயோஷி டெகெடா, தன்னுடைய தமிழ் பெயர் படையப்பா எனக் கூறுகிறார். ஜப்பானிய வாசனையுடன் தமிழில் இவர் பேசும் ரஜினி பட வசனங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.