தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் தமிழக பட்ஜெட், கொரொனோ வைரஸ் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
2020-2021-ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை சேர்க்கவேண்டிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2020-ம் ஆண்டின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்பட்டு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நாளை நடக்கும் கூட்டத்திற்கு பிறகும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனை நாளை நடைபெற வாய்ப்புள்ளது. முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து நாளை கலந்தாலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் நாளைய தினம் இறுதி முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.