அனைவரின் வாழ்க்கையையும் செல்போன்கள் ஆக்கிரமித்து உள்ள நிலையில், தற்போது கொரோனா, ஆன்லைன் வகுப்புகள் என கடந்த மூன்று வருடங்களில், சிறுவர்களும் செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர்.
சமூகவலைத்தளங்கள் வாயிலாக வயதுக்கு மீறிய விஷயங்களை காண்பது, பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
இதற்கு தீர்வு காண, புதிய age verification முறையை கொண்டு வந்துள்ளது இன்ஸ்டாகிராம்.
முதலில், பிறந்த நாள் மற்றும் வருடத்தை கேட்டு வந்த இன்ஸ்டாகிராம் தற்போது பயனாளர்களை selfie வீடியோ ஒன்றை upload செய்ய சொல்கிறது.
முகத்தின் அம்சங்களை வீடியோ மூலம் ஆராய முடியும் என்பதால், வயதை மாற்றி போட முடியாத நிலை உருவாகிறது.
Verification முடிந்த பிறகு, selfie video, delete செய்யப்பட்டு விடும் என கூறும் இன்ஸ்டாகிராம், இதன் மூலம் 13இல் இருந்து 18 வயது வரை உள்ள பயனாளர்களின் பாதுகாப்பான இன்ஸ்டாகிராம் அனுபவத்தை உறுதி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.