விண்வெளியில் ஈரத்துணியை கசக்கினால் என்ன ஆகும்?

313
Advertisement

வளிமண்டலம், கதிர்வீச்சு மற்றும் புவியீர்ப்பு விசை சரிவிகித அளவில் பூமியில் கிடைப்பதால் தான் வாழ்வதற்கு ஏற்ற இயல்பான சூழ்நிலை சாத்தியமாகிறது.

இந்த முக்கிய அம்சங்களின் அளவீடுகள் விண்வெளியில், வேறுபட்டு நிலவுவதால், பூமியில் சாதாரணமாக செய்ய கூடிய பல காரியங்களை விண்வெளியில் செய்ய அறிவியல் ஒத்துழைக்காது.

இதை, கனடாவை சேர்ந்த பிரபல விண்வெளி ஆராய்ச்சியாளர், Chris Hadfield ஒரு எளிய செய்முறை மூலம் விளக்கியுள்ளார். தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களின் செய்முறையே அது.

விண்வெளியில், ஈரமான துணி ஒன்றை கிறிஸ் கசக்க, புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் அதில் உள்ள தண்ணீர் கீழே வடியாமல், துணியை சுற்றி tube போல நிற்கிறது.

2013லேயே வெளியான இந்த வீடியோ தற்போது திரும்பவும் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.