இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்த கேன் வில்லியம்சனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து கேன்வில்லியம்சன் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக டாம் லேதம் அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.