வெயிலின் எதிரொலி மாணவர்கள் கவனத்திற்கு…

342
Advertisement

கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி நேரங்களை மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும் பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக உள்ளதால், வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்றும்  மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் முதலுதவி பெட்டி அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்து வரலாம் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.