கல்லூரிகளை மேம்படுத்த காமராஜர் பெயரில் ரூ 1,000 கோடியில் திட்டம்

388
Advertisement

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் அமரர் காமராஜர் பெயரில் கல்லூரிகளை மேம்படுத்த ரூ 1,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறையில் ஒற்றைச் சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ 1,000 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் கல்லூரிக் கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு, கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐடிஐ மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 வழங்கப்படும்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் நிபுணர்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு ரூபாய்கூட வாங்காமல் பொருளாதார நிபுணர்கள் வேலைசெய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.