90 காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர் அதிர்ச்சில் காங்கிரஸ்

53

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து, 90 காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிட  உள்ளார். கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற முடிவின்படி, தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதலமைச்சர்  பதவியிலிருந்து அசோக் கெலாட் விலகுவார் எனக் கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு  20 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

அதேசமயம், சச்சின் பைலட்டுக்கு முதலமைச்சர் பதவி வழங்கக்கூடாது என  அசோக் கெலாட் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெவித்து வருகின்றனர். இந்நிலையில், சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க  எதிர்ப்பு தெரிவித்து, 90 காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

Advertisement