அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாகிச்சூடு நடத்தியதில் 9 பேர் படுகாயமடைந்தனர்….

40
Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த மர்மநபர்கள், மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.