Monday, March 17, 2025

சாப்பிட்ட பிறகு நஞ்சாக மாறும் 7 உணவுகள் தயவு செஞ்சு தவறை தவிர்த்திடுங்க..!

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ Food Poison-னால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

அமெரிக்காவில் செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவல் படி, வேகவைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி, சரியாகக் கழுவப்படாத காய்கறிகள், பச்சை பால், பிற பால் பொருட்கள், அதிக நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட முட்டைகள், சரியாக சுத்தம் செய்யப்படாத மீன் போன்றவற்றை உண்ணும் போது அவை நச்சுத்தன்மைக்கு மாறுகின்றன எனத் தெரியவருகிறது.  மேலும் அசுத்தமான முளைகட்டிய பயறுகள், மற்றும் அதிக காலம் பயன்படுத்தப்படாத மாவு என இந்த மேற்கூறிய  7 உணவுகளும் சாப்பிட்ட பிறகு எளிதாக Food Poison-னால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன.

உணவிலுள்ள  எல்லா வகை பாக்டீரியாவும் எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை.சிலவற்றால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நம் வயிற்றில் பல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்கின்றன.இருப்பினும், உணவு நச்சுத்தன்மைக்கு பயந்து எந்த பாக்டீரியாவையும் தவிர்த்து  தீவிர சுகாதாரத்தைப் பின்பற்றுவதும் நல்லதல்ல என்றும் உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Latest news