ஒரு சப்பாத்தியை சாப்பிட்டால் 20 ஆயிரம் பரிசு

508
Advertisement

https://www.instagram.com/tv/CUMRmEWj1Ug/?utm_source=ig_web_copy_link

ஒரு சப்பாத்தியை சாப்பிட்டால் 20 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

10 கிலோ கோதுமை மாவில் செய்யப்பட்ட இந்த சப்பாத்தியில் 30 முட்டை சேர்த்து, அதனுடன் வதக்கப்பட்ட முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி, நூடுல்ஸ், உப்பு, மசாலா, சாஸ், சோயா சாஸ் ஆகியவையும் சேர்த்து சுற்றப்பட்டு ஒரு ரோல் ஆக செய்யப்பட்டது.

சுவையான இந்த மிகப்பெரிய சப்பாத்தி கேல் ரோலை 20 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பதே போட்டிக்கான நிபந்தனை.

வடக்கு டெல்லியின் மாடல் நகரில் அமைந்துள்ள பாட்னா ரோல் சென்டர் இந்தப் போட்டி சில மாதங்களுக்குமுன்பு நடந்தது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

நீங்க சாப்பிடுங்க, நான் வேடிக்கை பார்க்கிறேன் என்கிறீர்களா…. அதுவும் சரிதான்….
சப்பாத்திப் பிரியர்களே….சாப்பாட்டுப் பிரியர்களே….ஹோட்டல் உணவு விரும்பிகளே…. சமைக்க சோம்பல் படும் அம்மணிகளே… இந்த போட்டி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?