2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?

225
Advertisement

ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு கட் அவுட்லாம் வெச்சு சேலத்தில் மிகவும் பிரம்மாண்டமா 2 வது இளைஞரணி மாநாடு நடந்துருக்கு.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு இளைஞரணி மாநாடு நடந்தது. அப்போது,  மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு, நடத்தப்பட்ட 2 வது இளைஞரணி மாநாடு இது தான். அதனால, ஸ்டாலினுக்கு அடுத்தபடியா உதயநிதி தான்னு காட்டுறதுக்காக இந்த மாநாடு நடத்தப்பட்டதா தான் பேசப்படுது. பத்திரிக்கையாளர்களின் பார்வையும் அப்படி தான் இருக்கு.

என்னதான் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒரு அடித்தளமாக இந்த மாநாடு நடத்தப்பட்டதாக சொன்னாலுமே மக்களவை தேர்தலுக்கு பிறகுதான், இது தொடர்பான முடிவு வெளியாகும் என்பது அரசியல் ஆரவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பார்வையா இருக்கு. காரணம் ஒரு வேளை துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து மக்களவை தேர்தலில் போதிய அளவு வெற்றி பெறலன்னா அது உதயநிதி மீது அவப்பெயரையும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இது பெரும் அதிருப்தியையும் உருவாக்கிடும். அதே போல மக்களவை தேர்தலுக்கு முன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கினால் குடும்ப அரசியல் அப்டிங்குற வலுவான குற்றச்சாட்டடையும் ஸ்டாலின் சந்திக்க நேரிடும்

ஆனாலுமே உதயநிதியை பொருத்தளவுல துணை முதலமைச்சர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும்தான் இன்னும் கொடுக்கலையே தவிர, அதற்கான அதிகாரங்களோடுதான் அவர் செயல்படுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

சரி இப்போ அடுத்த கேள்வி ஒன்னு உருவாகுது. ஏன் இந்த மாநாட்டை சேலத்துல நடத்தணும்?

இந்த கேள்விக்கு நாம சட்டப்பேரவை தேர்தல்ல இருந்து வரலாம். சட்டப்பேரவை தேர்தல்ல 159 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றாங்க. இதுல கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்துல திமுக பின்னடைவை சந்திச்சாங்க. இதே சட்டப்பேரவை தேர்தல்ல கொங்கு மண்டலத்தில் 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கைப்பற்றுனாங்க. 2016 ஆம் ஆண்டு தேர்தல்லையும் மேற்கு மாவட்டங்கள் அதிமுகவுக்கு பெரிய அளவு கை கொடுத்துச்சு. இதையெல்லாம் தாண்டி எடப்பாடி பழனிசாமியின் கோட்டை சேலம்தான் அப்டிங்குற ஒரு பார்வையும் மக்கள் மத்தியில் நிலவுது. இதையெல்லாம் சரி கட்டி அங்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கத்தான் உதயநிதி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் முதற்கட்ட நகர்வாகத்தான் சேலத்துல இந்த மாநாடும் நடத்தப்பட்டுச்சு. இருந்தாலுமே மேற்கு மண்டலம் என்பது உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய டாஸ்க் தான்.

எது எப்படி இருந்தாலும் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் உதயநிதி முன்னிறுத்தப்படுவதால் திமுக மீதான அரசியல் வாரிசு விமர்சனம் இன்னமும் பலம் பெறுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையா இருக்கு.

-தஸ்னீம் பானு