13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர்,

35
Advertisement

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக ஆமதாபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட12 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக குறைந்தது 5 மைதானங்களை புதுப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி டெல்லி ஸ்டேடியத்துக்கு 100 கோடி ரூபாயும், ஐதராபாத்துக்கு 117 கோடி ரூபாயும், கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு 127 கோடி ரூபாயும், மொகாலிக்கு 79 கோடி ரூபாயும், மும்பை வான்கடேவுக்கு 78 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது