சிகரெட் பிடித்தால் உங்களுக்கு 1 கோடி இழப்பு

330
Advertisement

புகைப் பழக்கம் நமது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே .

ஆனால் சிகரெட் நமது நிதி நிலமையில் பல பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எனவே சிகரெடை தவிர்த்தால் 1 கோடியை சேமிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

30 வயதில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு முழு பாக்கெட் சிகிரெட் பிடித்தால் ரூ 170 செலவிடுகின்றனர், மாதம் ரூ 5,100 செலவாகும்.

ஆனால் சிகிரெட் பிடிக்காத ஒரு நபர், இதே 5,100 ரூபாயை ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு வட்டி கிடைக்கும் மியூட்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி திட்டங்களில் போட்டு வந்தால், அடுத்த 30 ஆண்டு முடிவில் ரூ 1 கோடியே 6 லட்சம் இருக்கும், அதுதான் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அதிசயம்.

முதலீடு செய்தது ரூ 18.3 லட்சம் தான் ஆனால் தந்த ரிட்டர்ன் ரூ 87.7 லட்சமாக இருக்கும், சிகரெட் விலை உயர்வைக் கணக்கிடும் போது இது மாறும்.

சரி சிகிரெட் பழக்கத்தை முழுமையாக நிறுத்த முடியவில்லை, பாதியாக குறைத்துக் கொள்கிறேன் என்றாலும் மாதம் 2,550 ரூபாய் செலவாகும்,

இக்கணக்கின் படி, அப்போதும் ரூ 53 லட்சம் சேமிக்கலாம், எனவே சிகரெட்டை நிறுத்திவிட்டால் உங்களைப் போன்ற சிறப்பான நபர் யாரும் இல்லை, ஆரோக்கியமான மற்றும் ஆடம்பரமான எதிர்காலத்திற்கு இதனை முயற்சித்துப் பாருங்கள்.

சொல்லுவது எளிது ஆனால் கடைப்பிடிப்பது கடினம் , எனவே உறுதி எடுத்து கொண்டு இன்றே சேமிப்பைத் தொடங்குங்கள்.