காந்தியின் ஆவி என்று பயந்த மக்கள்

236
Advertisement

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த தினமாக இன்று, காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

இதனால் காந்தி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை சமுகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது, ஆனால் காந்தி என்ற தலைப்பில் 1982-ல் வெளியான படம், உலகளவில் சுமார் $127 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது, எனவே படத்தின் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ 2012-ல் கூறிய ஒரு விஷயம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற இப்படத்தின் ஷுட்டிங்கை பல மக்கள் பார்த்துள்ளனர், எனவே காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லியை பார்த்து பலரும் காந்தியின் ஆவி என்று பயந்தனர்.

அவரது உடல்வாகு உண்மையான காந்தியை போன்றே இருந்தது. இந்த திரைப்படத்தில் முழு உழைப்பையும் செலுத்த வேண்டும் என காந்தி குறித்த தகவல்களைத் தேடி தேடி படித்தார் பென் கிங்ஸ்லி. காந்தியைப் போலவே இவர் நூல் நூற்பதற்குக் கற்றுக்கொண்டார். இவையெல்லாம்தான் இந்த படத்தின் வெற்றிக்காக உதவியது என்றார்.