ஒரே விரலில் 129 கிலோ இரும்பை தூக்கிய மனிதர்

357
Advertisement

ஸ்டீவ் கெல்லர் என்பவர் தற்காப்புக் கலையை நங்கு கற்ற ஒரு நபர், இவர் 10 வருடங்களாக முறியடிக்க முடியாத ஒரு உலக சாதனையை தற்போது முறியடித்து அசத்தியுள்ளார்.

ஒரே விரலில் 129 கிலோ இரும்பு தட்டுகளை தூக்கி புதிய கின்னஸ் சாதனையைச் செய்துள்ளார், 48 வயதை எட்டிய ஸ்டீவ் மூன்று 25 கிலோ தட்டுகள் ஒரு 26, 20 கிலோ மற்றும் ஒரு 10 கிலோ தட்டுகளைத் தனது நடு விரலை மட்டும் பயன்படுத்தி டெட் லிப்ட் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

இவர் 4 நான்கு வருடங்களாக வலிமை பயிற்சியை  தொடர்ந்து செய்துவரும் நிலையில், ஒரு நாள்  வலிமை பயிற்சியை செய்து கொண்டு இருந்தபோது விளையாட்டாக அதிகப் படியான இரும்பு தட்டுகளை தூக்க முயன்று தூக்கியதால் இவர் உலக சாதனை செய்ய முடிவெடுத்தார்.

எனவே முன்னதாக 121.70 கிலோவை தூக்கி இஸ்ரயேல்யன் என்பவர் சாதனை செய்திருந்தார், கிட்டதட்ட 10 ஆண்டுகள் இந்த சாதனை முறியடிக்க படாமல் இருந்தது, எனவே இவரைவிட 10 கிலோ அதிகமான பளுவை ஸ்டீவ் கெல்லர் தூக்கி சாதனையைச் செய்துள்ளார்,

மேலும் ஸ்டீவ் கராத்தே மற்றும் ஜூடோ தற்காப்புக் கலைகளை நன்கு பயின்றவர் , இந்த நிலையில் இவர் செய்த புதிய உலக சாதனையை கின்னஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.