உலக கோப்பைக்கு முன்னால் தவிக்கும் இந்திய அணி

291
Advertisement

இந்திய கிரிக்கெட் அணிதான் டி – 20 உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை உறுதியாக நினைத்தார்கள், ஆனால் ரசிகர்களின் கனவை, இந்த ஒரே மாதத்தில் காலி செய்து விட்டது இந்திய அணி.

பலம் வாய்ந்த இந்திய அணி ஆசிய கோபையின் அரையிருதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது, அதுபோல தற்போது அஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தடுமாறி வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக நன்றாக விளையாடிய, இந்திய அணி திடீரென சொதப்புவதற்கான காரணத்தை இத்தொகுபில் பார்க்கலாம்.

முதலில் சுழற்ச்சி முறையில் வீரர்களை மாற்றியது தான், டி – 20 உலக கோப்பைகாக சோதனை  செய்கின்றேன் என்ற பெயரில், வீரர்களை உள்ளே வெளியே என்று கொண்டு சென்றதால், வீரர்கள் மனதளவில்  குழப்பம்மடைந்தனர், இதனால் அணியில்  இடம்கிடைக்குமா என்ற பயம் வீரர்களுக்கு வந்துவிட்டது.

இதுதான் புவனேஷ்வர் குமார், சஹால் (Chahal ) போன்ற வீரர்கள் சொதப்புவதற்கு காரணமாக இருந்தது, ஏனென்றால் சீனியர்களாக அவர்கள் சிறப்பாக செயல் படவேண்டிய நிலை ஏற்பட்டது, அடுத்து திடீரென சீனியர் வீரர்களை உலக கோப்பைக்கு முன்னால் அணியில் கொண்டுவந்தது தவறு, சீனியர்கள் இல்லாமல் இந்திய அணியால் வெற்றி பெறமுடியும் என்று நிலையில், தற்போது கே எல் ராகுலை உள்ளே கொண்டு வந்தது தவறாக பார்க்கப்படுகிறது. இது ஜூனியர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும்.

அதுபோல பும்ரா போன்று  சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு  திடீரென ஒய்வு கொடுத்து ஏன், இதுபோல செய்வது அவரின் ஃபார்மில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோல இந்திய அணி செய்த வேறு தவறுகளை கமெண்டில் சொல்லுங்கள்.