ஒரு நாளில் பல மணிநேரங்களுக்கு செல்போன்களை அனைவரும் பயன்படுத்துகிறோம், இதனால் பல விதமான பாதிப்புகள் உடலில் ஏற்படுகிறது, குறிப்பாகத் தூங்குவதற்கு முன்பு செல்போனை படுக்கையில் படுத்தபடி, சில மணிநேரங்கள் பார்த்தால் தான் தூக்கம் வரும் என்கின்ற நிலைமை ஆகிவிட்டது, இதனால் தூக்கம் வரும்போது செல்போன்களை படுக்கைக்கு அருகிலேயே வைத்துத் தூங்கிவிடுகிறோம், இது பல விதமான பாதிப்புகளை உண்டுபடுத்துகிறது.
மனித உடலின் பல விதமான செயல்பாட்டை மூளைதான் செயல்படுத்துகிறது, எனவே செல்போன்களின் கதிர்வீச்சு மூளைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் கட்டிகள் வரும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
மேலும் போன்களை தலையணையின் கீழ் வைத்துத் தூங்குவதால், வெப்ப அதிகரித்து, எனவே போன் வெடிக்கும் வாய்ப்பு அதிகம்.
ஆண்கள் பல மணிநேரங்களுக்கு செல்போன்களை தங்களின் பாக்கெட்டில் வைத்திருப்பது ஆண்மைக்குறைவை ஏற்படுத்துகிறது,
பெண்கள் போன்களை உள்ளாடைக்குள் வைப்பது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
இரவில் அல்லது மிக இருட்டான இடத்தில் பல மணிநேரங்களுக்கு செல்போன்களை பயன்படுத்தினால், கண்களில் இருக்கும் நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்யும்.
ஏதேனும் தெரியாத ஆப்புகளைத் தரவிறக்கம் செய்யும்போது கவனம் அதிகம் இருக்க வேண்டும்.