இந்தியா ஒற்றுமை பயணத்தை கிண்டல் செய்து விமர்சித்த பா.ஜ.க அமைச்சர்

331

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என  பா.ஜ.க. அமைச்சர்  பிஜூஷ் ஹசாரிகா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசில் நடக்கும் நடக்கின்ற சம்பவங்களை பார்க்கும்போது, காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் போல் தெரிகிறது என  கூறினார்.

முன்னதாக, அசாம்  மாநிலம் தூப்ரி மாவட்டத்தில் ராஜீவ் பவனில் இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு குழுக்கள் இடையே  ஏற்பட்ட மோதலை  சுட்டிக்காட்டி பிஜூஷ் ஹசாரிகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.