கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டுவரை ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே வேலைகளை அவருடைய குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. லாலுபிரசாத் யாதவின் மகள்கள் ராகினி யாதவ், சாந்தா யாதவ், ஹேமா யாதவ், ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது. இந்நிலையில், ராகினி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் அளித்த பதில்கள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன.
ரயில்வே வேலைகளை அவருடைய குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கொடுத்ததாக புகார் எழுந்தது..!
Advertisement