நிழல் தெரியாத அதிசயமான நாள் இன்று…

511
Advertisement

நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் 12;13 மணி அளவில் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிழல் இல்லா நாள் தோன்றும். இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டவது நிழல் இல்லா நாள் சென்னையில் இன்று 12:13 மணியளவில் நிகழ்ந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அறிவியல் பலகையின் இயக்குநர் வெங்கடேஷ், இன்று நிகழ்ந்த நிழல் இல்லா நாள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

நாளை திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழும் என்றும் இறுதியாக, செட்படம்பர் 1 ம் தேதி கன்னியாகுமரியில் தோன்றி நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

பூமிக்கு தெற்கு நோக்கி நகர்ந்த சூரியன் வடக்குநோக்கி நகர தொடங்கியதால் பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்கிறது என்றும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பூமி 23.5டிகிரி சாய்வாக இருப்பதால் நிழல் இல்லா நேரமாக உள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.