Zombie Ice உருகுவதால் உலகிற்கு வரவுள்ள பேராபத்து

322
Advertisement

பனிப்பாறைகளில் புதிய பனியால் நிரப்பப்படாத பனிக்கட்டி பகுதிகள் Zombie Ice என அழைக்கப்படுகிறது.

Zombie Ice வகை பாறைகள் புது பனி கொண்ட பாறைகளை விட வேகமாக உருகும் தன்மை கொண்டவை பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் மற்றும் சுற்றுசூழல் மாசு பாடுவதன் காரணமாக, Greenlandஇல் உள்ள மொத்த பனிபாறைகளில் கிட்டத்தட்ட 3.3 சதவீதம் உருக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், உலகளாவிய கடல் மட்டம் 10 இன்ச் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரை அருகில் அமைந்துள்ள முக்கிய பெருநகரங்கள் பலவற்றுக்கும் இது பாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது.

கடல் நீர் அளவு உயர்வதால் புயல்கள், உயர் அலைகள் மற்றும் வெள்ளங்கள் வாடிக்கையான நிகழ்வாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

பூமிக்கு நேரக்கூடிய ஆபத்துகள் தொடர்பாக, World Economic Forum 2019ஆம் ஆண்டுஅளித்த அறிக்கையின்படி, 570க்கும் அதிகமான கடற்கரை நகரங்களில் வசிக்கும் 800 மில்லியன் மக்கள், உயரும் கடல்நீர் அளவுகளினால் 2050க்குள் பாதுகாப்பான வாழ்விடங்களை இழக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.