நச்சு நுரை பொங்கி பாய்ந்தோடும் யமுனை ஆறு

362

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு, இமயமலையில் உற்பத்தியாகி, டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடி உத்தரப்பிரதேசம், அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

இந்நிலையில், ரசாயன கழிவு கலப்பு காரணமாக டெல்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்துள்ளது.

இதனால், யமுனை ஆற்றில் மலைபோல் நுரை பொங்கி எழுகிறது.

தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால், பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

யமுனை ஆற்றில் நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.