தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், பெரம்பலூரில், தனியார் கல்லுரியில் துறைமங்கலத்தை சேர்ந்த அனிதா என்ற நிறைமாத கர்ப்பிணி, குரூப் 2 தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், தேர்வறையில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
இதற்கிடையே, பிரசவ வலியால் துடித்த அனிதா 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும், மன தைரியத்துடன் தேர்வு எழுத வந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.