மார்பகங்கள் இன்றி வாழும் பெண்!

181
girl
Advertisement

மார்பக புற்று நோய் பாதிப்பால் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, 9 வயது குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை பெண்மணியை பற்றிய கதையே இது…

முன்னணி நாடான அமெரிக்காவில் உள்ள பே சிட்டி யில் பிறந்தவர் மரிசா கிம்மல், இவர் தனது ஒன்பதாவது வயதில் ​​மரபணு குறைபாட்டு நோயால் பாதிக்கபட்டார்.

அதன் காரணமாக தலை முதல் கால் வரை ஒரு முடி கூட இல்லாமல் கொட்டிவிட்டது. இந்த நோயை சரி செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. வேறு வழியே இல்லாமல் தனது தலையை மொட்டை அடித்து மனவருத்தத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

Advertisement

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரால் வெறுக்கப்பட்ட மரிசா, முடி திருத்தும் பள்ளியில் படிக்கும் ஒரு நபரை காதலித்து தனது 19 வயதில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு, மரிசாவிற்கு மார்பக புற்று நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இரண்டு மார்பகங்களையும் அகற்றினால் தான் வாழ முடியும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இம்முறை மார்பக புற்றுநோயை நினைத்து மரிசா துன்பத்தில் துவண்டுதுவிடவில்லை, தனது 1 வயது குழந்தைக்காகவாவது வாழ வேண்டும் என்று தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வாழ்ந்து வருகிறார்.

புகைப்பட கலைஞரான மரிசா ,மார்பகம் அற்ற தனது உடல் முழுதும் வண்ணமயமான படங்களை பச்சை குத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மார்பக புற்று நோயால் துவண்டு வாழும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.