உலகத்தின் மிக கொடிய நோய்க்கு அருமருந்தாகும் கோதுமை புல் ஜூஸ்…

182
Advertisement

கோதுமை  புல்  என்ற பெயரை  நீங்கள்  பலமுறை  கேட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இது காய்கறியோ  அல்லது பழமோ அல்ல.

  இது கோதுமைச்  செடிகளில் புதிதாக முளைக்கும் இலைகள் ஆகும். இது புல்  போலத்  தோற்றமளிக்கும்,  இதனால் கோதுமை புல்  என்று  அழைக்கப்படுகிறது.  ஆனால் இது பலவிதமான மருத்துவ  மூலிகைகளைக் கொண்டுள்ளது, சமீப காலமாக இது மிகவும்  பிரபலமாகியுள்ளது.  ஏனெனில்  இது  பல நோய்களைத்  தடுக்கிறது. புற்றுநோய்  மிகவும் கொடிய  நோயாகும். ஆனால் கோதுமைப்  புல்  புற்றுநோய்  செல்களைத்  தடுக்கவும் குறைக்கவும் உதவுகிறது, எனவே எவ்வாறு  இதைப் பயன்படுத்தலாம்  என்று அறிந்து கொள்ளலாம்.

கோதுமைப்  புல்லில்  பல  வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ  அமிலங்கள் மற்றும்  அத்தியாவசிய  நொதிகள்  உள்ளன. எனவே இது  புற்றுநோயின்  எதிர்ப்பு  மருந்தாகும்.  அதுபோல இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம்  மற்றும் அமினோ  அமிலங்கள்  இதில் அதிகமுள்ளது.  

NCBI  ஆய்வில்  கோதுமைப்  புல்  சாறு  குடிப்பதால்  வாய்  புற்றுநோய்க்கு காரணமான  செல்கள்  41%  குறையும் என்று  தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மட்டுமல்லாமல் பல் சிதைவைத் தடுக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும், சளிக்கு சிகிச்சையளிக்கவும், குமட்டலைப் போக்கவும் உதவுகிறது.