வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜய்! சூடான் ரசிகர் செய்த தரமான செயல்

152
Advertisement

அண்மையில் ‘நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள்’ மற்றும் ‘ரசிகர்களின் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள்’    என்ற தலைப்பில் விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சூடான் நாட்டை சேர்ந்தவர் ‘நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள்’ என்ற அணியில் அமர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

சினிமா மக்களை ஒன்று சேர்க்கும் கருவி எனக் கூறிய அவர், பல தமிழ் படங்களை பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

இது போதாதென, பிடித்த நடிகர் யாரென்ற கேள்விக்கு விஜய் என அந்த நபர் பதிலளிக்க அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

பின், தனது மொபைல் போன் பேக் கேஸில் வைத்துள்ள விஜய் போட்டோவை காட்டி மீண்டும் அப்லாஸ்களை அள்ளினார் சூடான் ரசிகர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.