கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு!

356
vadivelu
Advertisement

நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார்.

இந்த உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நாய் சேகர், வெடிகுண்டு முருகேசன், தீப்பொறி ஆறுமுகம், வண்டு முருகன், கைபுள்ள உள்ளிட்ட பெயர்களுடன் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனது பிறந்தநாளில் வெளியே வராத வடிவேலு இந்த ஆண்டு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘எனக்கு எண்டே கிடையாது’ என்ற வசனத்துக்கு ஏற்ப மீண்டும் திரைத்துறையில் தனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்க இருக்கிறார் நடிகர் வடிவேலு.

தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வரும் வடிவேலுவுக்கு நேற்று பிறந்த நாள்.

தனது 61வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அவர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தனது புதிய படமான நாய் சேகர் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ-வுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.