தன்னை ஈவ்-டீசிங் செய்த நபரை 20 வினாடிகளில் 40 முறை செருப்பால் அடித்த பெண்

141
Advertisement

உத்தரபிரதேசத்தின் ஜலான் மாவட்டதில் தன்னை   ஈவ்-டீசிங் செய்ததாக இளம்பெண் ஒருவர்,அந்த நபரை கண்முடித்தனமாக காலனியால்  தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த நபர் ,அந்த பெண்ணை  ஈவ்-டீசிங்  செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கோவமடைந்த அந்த பெண்,தான் அணிந்திருந்த காலனியால் அந்த நபரின் தலையில் கண்முடித்தனமாக தாக்கியுள்ளார்.20 வினாடிகளில் 40 முறை அந்த நபர் தாக்கப்படுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.தகவலறிந்து வந்த  காவல்துறை அந்த நபரை  கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.