உ.பி. வன்முறை – காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

269
up
Advertisement

உத்தரப்பிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உ.பி. வன்முறை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.