பாஜக தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சுவர் இடிந்து விழுந்தது

363
Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொள்வதற்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஹெலிகாப்டர் மூலம் பாலியா மாவட்டத்திற்கு வந்தார். அங்குள்ள இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர்
தரையிறங்கியபோது ஏற்பட்ட பலத்த காற்றினால் அங்கிருந்த கல்லூரி சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுவர் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.