தனியார் பள்ளிக்கள் கட்டண உயர்வு செய்வது என்பது மாற்றமுடியாத ஒன்று.எதிர்காலத்தில் தன் குழந்தை திறமையாக , வெளிநாட்டு நிறுவனுங்களில் வேலைசெய்ய வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக,இது எல்லாம் தனியார் பள்ளியில் பயின்றால் மட்டுமே நிறைவேறும் என்ற கண்ணோட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை தனியார்பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர்.
இதை பயன்படுத்தி சில தனியார்பள்ளிகள் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்துவது,மாணவர்களின் திறமையை அதிகரிக்க கூடுதல் பயிற்சிகள் என பெற்றோர்கள் தலைசுற்றிப்போகும் அளவிற்கு ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள் சில தனியார் பள்ளிகள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல குடும்பங்கள் கொரோனா தாக்கத்தில் வேலை இழந்து , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகளின் கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
இதுபோன்ற கட்டணஉயர்வு புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த உ.பி அரசு அனுமதி வாங்கியதாக ,மாநில அரசை கண்டித்து நொய்டாவில் உள்ள எக்ஸ்டென்ஷன் பிளாட் உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் என்.சி.ஆர் பெற்றோர்கள் சங்கம் சார்பில் தெருக்களில் காலணிகளை பாலிஷ் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்.
இது குறித்து பாதிக்கப்பட்டபெற்றோர்கள் கூறுகையில் ,
மாநில அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டோம் , எங்களில் பலர் லாக்டவுன்கள், வேலை இழப்புகள் அல்லது ஊதியக் குறைப்புகளின் போது ஏற்பட்ட வணிக இழப்புகளால் இன்னும் தவித்து வருவதாக கூறுகின்றனர்.
முன்னதாக காஜியாபாத்தில், கட்டண உயர்வு உத்தரவை திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தி, பெற்றோர்கள் ஏற்கனவே முதலமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளனர் இந்நிலையில், மாநிலஅரசின் இந்த நடவடிக்கை பெற்றோர்களைஅதிர்ச்சி அடைய வைத்துள்ளது.