தமிழகத்தில் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக அரசுரிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா

85

தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய சிறு-குறு தொழில் துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மட்டும் என்.ஐ.ஏ சோதனை நடக்கவில்லை என்றும் தமிழகம் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் சோதனை நடந்தது என்று கூறினார்.

தேசத்துக்கு விரோதமாக யார்  செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்தார். பாஜக பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Advertisement