உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது குற்றம்சாட்டி

350

மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா போர்க்களமாக மாற்றி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  குற்றம்சாட்டி உள்ளார். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பை தாக்க ரஷ்யா டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் மின் நிலையங்களில்  மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளது.

இதனால், உக்ரைனில் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளாக போர்க்களமாக மாற்ற ரஷ்ய தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும், இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு ஆபத்து எனவும் கூறினார்.

உக்ரைனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மின்சாரம் மற்றும் குளிர்காலத்தைசமாளிப்பது தொடர்பான பிரச்சனைகளை உருக்குவாக்குவதை நோக்கமாக கொண்டு ரஷ்யா தாக்குதல்களை தொடுத்துள்ளது எனவும் ஜெலன்ஸ் கூறினார்.