ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்நது ஆதரவு அளிக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். இங்கிலாந்தின்57-வது பிரதமதாக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் 3-ஆம் சார்லஸ் அறிவித்தார். இதனையடுத்து, ரிஷி சுனக்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்ததாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.