பிரிட்டன் மண்ணில் உள்ள ‘ரகசிய காவல் நிலையங்களை’ மூட சீனாவுக்கு இங்கிலாந்து உத்தரவு….

148
Advertisement

பிரிட்டனில், உள்ள ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேந்தட் தெரிவித்துள்ளார்.

சீனத்தூதரகம் மூலமாக இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் சீனா தங்களது காவல் நிலையங்களை இயக்கக்கூடாது என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இருந்த அனைத்து காவல் நிலையங்களும் மூடப்பட்டு விட்டதாகவும், இங்கிலாந்து சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.