முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

26
Advertisement

செல்போன் செயலி மாத சந்தாவான 900 ரூபாயை கட்டாததால் பிரபலங்களின் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட கணக்கிலும் ப்ளூ டிக் நிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி, விராட் கோலி உள்ளிட்டோரின் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் நிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தனுஷ், சிம்பு, சிவகார்திகேயன், விஜய் சேதுபதி  உள்ளிட்ட திரைப்பிரபலங்களின் கணக்கிலும் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

இனி மாத சந்தா 900  கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்காக ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.