குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது…

164
Advertisement

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்ததால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்தனர்.

இந்நிலையில், இடியுடன் கனமழை பெய்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். தற்போது மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரான நிலையில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக குற்றால வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.